Saturday, October 29, 2011

புதிய வாகனம் வாங்குவோரே

புதிய வாகனம் வாங்கும் நண்பர்கள் அனைவரும் முதலில் செய்யும் விஷயம் , அந்த வாகனத்திற்கு பூஜை போடுவதுதான். ஷோரூமில் இருந்து நேராக அருகில் இருக்கும் பிரபலமான கோவிலுக்கு சென்று பூஜை செய்வார்கள்.

அங்குள்ள பூசாரியும் கார் என்றால் 200 ரூபாய், இருசக்கர வாகனம் என்றால் 100 ரூபாய் என வாங்கிகொண்டு  ஏனோதானோ என்று பூஜை செய்வார். இதில் பூஜை சாமான் தனி.  அதற்கும் சில கோவில்களில்  fixed rate உண்டு.

நாம் உழைத்து நம் பணத்தில் வாகனம் வாங்குகின்றோம். நம் வாகனம் விபத்து இல்லாமல் நன்றாக ஓட வேண்டும் என்று நம்மை விட வேறு யாருக்கு அக்கறை இருக்கும்?  நம்முடைய் வாகனத்திற்கு ஏன் நாம் பூஜை செய்யகூடாது?

புதிய வாகனத்தை நம் வீட்டிற்கு கொண்டு வந்து  நல்ல இறைநினைப்புடன் கடவுளை வேண்டிக்கொண்டு நாமே பூஜை செய்யலாமே?  நமக்கும் கடவுளுக்கும் இடையில் ஏன்  இடைதரகர்?  

என் மனதில் நினைத்ததை எழுதிவிட்டேன். தவறு இருந்தால் சொல்லுங்கள்.

நீங்கள் சொல்லவேண்டும் என நினைப்பதை கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.




3 comments:

  1. //என் மனதில் நினைத்ததை எழுதிவிட்டேன். தவறு இருந்தால் சொல்லுங்கள்.//

    தொடருங்கள்

    வாழ்த்துக்களுடன்
    சம்பத்குமார்..

    ReplyDelete
  2. நினைத்தை சேமித்து வைக்கவும் நண்பர்களுக்கும் உலகுக்கும் தெரியப்படுத்தவும் கிடைத்த அரியதொரு வாய்ப்பு வலைத்தளம்..

    வாய்ப்புகளை சரியாய் பயன்படுத்துவோம்..

    அன்புடன்
    சம்பத்குமார்
    www.tamilparents.com

    ReplyDelete
  3. //நினைத்தை சேமித்து வைக்கவும் நண்பர்களுக்கும் உலகுக்கும் தெரியப்படுத்தவும் கிடைத்த அரியதொரு வாய்ப்பு வலைத்தளம்..

    வாய்ப்புகளை சரியாய் பயன்படுத்துவோம்..//




    நன்றி நண்பரே!

    ReplyDelete