Tuesday, July 25, 2017

பூனைகள்




முதன்முதலில் பூனைகளோடு எனக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது என்று நினைவில்லை...நான் பிறப்பதற்க்கு முன்பிருந்தே எங்கள் வீட்டில் பூனை இருந்து கொண்டுதான் இருக்கிறது....

                                          பூனைகள் சுவாரசியமானவை...வளர்ப்பு மிருகமாக இருந்தாலும், சற்றே திமிர் பிடித்தவைகள் என்பது என் அனுமானம்..நாய்களுக்கும் பூனைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நாய் வீட்டில் உள்ள எல்லோரிடமும் நன்கு பழகும், சோறு வைப்பவர் எல்லாரும் சொந்தம் என்ற உயர்ந்த கொள்கை உடையது  உனக்கு என்னை பிடிச்சிருக்கா?? ஓகே அப்ப எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு!!!!! .என்ற பெரிய குணம் கொண்டது....
                                    ஆனால் பூனைகிட்ட அந்த மாதிரி பெருந்தன்மையெல்லாம் கிடையாது..." இங்க பார்..உனக்கு என்னை பிடிச்சிருக்குன்றதெல்லாம் எனக்கு முக்கியமில்ல..எனக்கு உன்னை பிடிக்குதான்றதுதான் முக்கியம்" அப்படிங்கற மாதிரிதான் அதோட நடவடிக்கை இருக்கும்.

                                  பொதுவா பூனை வளர்ப்பது ரொம்ப ஈசி...பூனைகுட்டிய பிடிச்சிட்டு வந்து வீட்ல விட்டுட்டா போதும்..அது பாட்டுக்கு வைக்கிறத தின்னுட்டு வளந்துரும்..சங்கிலியால கட்டிபோடனும், காலையில எழுப்பி கக்கா இருக்க வைக்கனும், ஷாம்பு போட்டு குளிப்பாட்டனும் போன்ற கஷ்டம்லாம் கிடையாது,  பூனைகள் ரொம்ப சுத்தமானவை...வெள்ளை நிறமென்றால் தூய வெள்ளை நிறம், கருப்பு நிறமென்றால் தூய கருப்பு நிறம் என தன் உடலை பராமரிக்கும்...அதனால அத பராமரிக்க  நாய் படாத பாடு படவேணாம்.. இதனாலேயே எனக்கு நாய்கள் மேல பெரிய ஈடுபாடு கிடையாது..

                                 
                   
                                  எங்க வீட்ல வளர்ந்த பூனைகளுக்கு நான மட்டுமே செல்லம்..வீட்ல நான் கடைக்குட்டி, அதனால அதிகாரம் பண்ற அதிகாரம் எனக்கு கிடைக்க வாய்ப்பில்லாததனால என்னோட அதிகார திமிர காட்டுறதுக்கு எனக்கு கிடைத்த அடிமைதான் பூனை..எங்க அண்ணன்ட்ட நான் அடி வாங்கினா என்னோட பதில் அடி என்னோட அடிமை பூனைக்கு தான் விழும்..அதுவும் " ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு "ங்கற மாதிரி அடிடா அடிடா ன்னு வாங்கிக் கொள்ளும்...என்னைத்தவிர வேற யார்கிட்டேயும் ஒட்டாது...ஸ்கூல் விட்டு வந்ததும் மொத வேலை பூனைய தூக்கி  கொஞ்சறது தான். அது சாப்பிடறது, தூங்கறது எல்லாம் என்னோட தான்...என்னைக்காவது கறி, மீன் வீட்ல சமைச்சாதான் மத்தவங்களோட கொஞ்சம் நட்பு பாராட்டும்...மத்தபடி நான் ஏற்கெனவே சொன்ன " இங்க பார்..உனக்கு என்னை பிடிச்சிருக்குன்றதெல்லாம் எனக்கு முக்கியமில்ல..எனக்கு உன்னை பிடிக்குதான்றதுதான் முக்கியம்" என்ற கொள்கை தான்...

                                    பூனைக்கும் எனக்கும் இருந்த இந்த நெருக்கம்லாம் எனக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் தான்..எனக்கு பிடித்த பூனை என் மனைவிக்கு பிடிக்காமல் போனதில் ஆச்சரியமில்லை அல்லது பூனைக்கு என்னை பிடிச்சிருந்ததால வீட்டம்மாக்கு பூனையை பிடிக்காம போயிருக்கலாம், மொத்தத்துல. மனைவிக்காக நான் தியாகம் பண்ணுன உறவு .....பூனை....!!!!!!
             
                             பத்து வருசம் ஆனாலும் இப்பவும் எங்கேனும் பூனையை பார்த்தால் நின்று சில நொடிகள் ரசித்து விட்டுதான் செல்வேன்..

என் சிறு வயதில் நான் வளர்த்த குழந்தைகள்....பூனைகள்!!!!!

                               
                              

Monday, July 17, 2017

செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்:

செக்கு எண்ணெயின் பயன்கள்:



·         செக்கு மெதுவாக இயக்குவதால் எண்ணெயில்  உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன

·         மரச்செக்கு எண்ணெய் நிறம் குறைவாகவே இருந்தாலும், நல்ல வாசனையுடனும் ஓராண்டு வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள், ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

·         எண்ணெயின் அடர்த்தி காரணமாக குறைந்த அளவே செலவாகும்.

·         செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் ,தேங்காய் எண்ணெய் ,விளக்கென்னை , நல்லெண்ணெய் ஆகியவற்றில் பல வைட்டமின்கள் குறிப்பாக ஆண்டி ஆக்சிடண்ட்கள் வைட்டமின் ,தாது உப்புகளான இரும்புசத்து ,துத்தநாகம் ,மக்னீசிம், செம்பு ,கால்சியம் முதலானவை உள்ளன . இந்த தாது பொருட்கள் முலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருட்கள் நம் கை , கால் மூட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.இவை தான் எண்ணெயின் உண்மையான குணங்கள் .

·         நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், கடலை எண்ணெயையும், நல்லெண்ணையையும் அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காய வைத்து) உபயோகித்தனர்

    இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழ கொழப்பாகவும் இருக்கும் இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள்,உயிர் சத்துக்கள் தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான புரோடீன்கள் ,வைட்டமின்கள் ,தாது பொருட்கள் ,நார்சத்துக்கள்,
குளோபில்.கால்சியம் ,மாக்னீசியம் ,காப்பர் ,இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவையுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன .உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை ..
·          
·         செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் அது உடலில் தேவையற்ற கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் .செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் தாய்பாலுக்கு இணையான பல நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட அமிலங்கள் உள்ளது .
·          
·         செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் நோய் மற்றும் முதுமையை தடுக்கும் வைட்டமின் யும் கொலஸ்ட்ட்ரலை குறைக்கும்.

·         மூல தொந்தரவு , மாத விலக்கு தொந்தரவு மூச்சுகுழல் பிரச்சனைகள் ,சரும பிரச்சனைகள் முதலிய பிரச்சனை உள்ளவர்கள் நல்லெண்ணை தொடர்ந்து பயன்படுத்த இந்த தொந்தரவுகள் நீங்கும் .

   செசாமின் என்ற பொருள் நல்லெண்ணையில் இருப்பதால் வாதம் ,இதய நோய் வராமல் முன் கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுபாட்டில் வைத்து கொள்கிறது .

மர,கல் செக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும்.

ஆனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத்திற்கு கெட்டுப் போகாமலும் இருக்கும்.

ஒரு முறை மர,கல் செக்கு எண்ணெய் சாப்பிட்டால் அதன் ருசி கால கால காலத்திற்கும் மறக்காது .

இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும்.

தரமான செக்கு எண்ணெய்கள் எங்களிடம் கிடைக்கும். ISO 22000:2005 Certified, மற்றும் FSSAI- உணவுப் பாதுகாப்பு தர சான்றிதழ் பெற்றது.


தொடர்பு கொள்க: 9080769056




சென்னை நகர் முழுவதும் இலவச டோர் டெலிவெரி செய்யப்படும்.

நச்சு எண்ணெய்களை தவிர்ப்போம்

செக்கு எண்ணெய்களை பயன்படுத்துவோம்

உணவை ஆரோக்கியமாக்குவோம்.


·