Saturday, October 29, 2011

புதிய வாகனம் வாங்குவோரே

புதிய வாகனம் வாங்கும் நண்பர்கள் அனைவரும் முதலில் செய்யும் விஷயம் , அந்த வாகனத்திற்கு பூஜை போடுவதுதான். ஷோரூமில் இருந்து நேராக அருகில் இருக்கும் பிரபலமான கோவிலுக்கு சென்று பூஜை செய்வார்கள்.

அங்குள்ள பூசாரியும் கார் என்றால் 200 ரூபாய், இருசக்கர வாகனம் என்றால் 100 ரூபாய் என வாங்கிகொண்டு  ஏனோதானோ என்று பூஜை செய்வார். இதில் பூஜை சாமான் தனி.  அதற்கும் சில கோவில்களில்  fixed rate உண்டு.

நாம் உழைத்து நம் பணத்தில் வாகனம் வாங்குகின்றோம். நம் வாகனம் விபத்து இல்லாமல் நன்றாக ஓட வேண்டும் என்று நம்மை விட வேறு யாருக்கு அக்கறை இருக்கும்?  நம்முடைய் வாகனத்திற்கு ஏன் நாம் பூஜை செய்யகூடாது?

புதிய வாகனத்தை நம் வீட்டிற்கு கொண்டு வந்து  நல்ல இறைநினைப்புடன் கடவுளை வேண்டிக்கொண்டு நாமே பூஜை செய்யலாமே?  நமக்கும் கடவுளுக்கும் இடையில் ஏன்  இடைதரகர்?  

என் மனதில் நினைத்ததை எழுதிவிட்டேன். தவறு இருந்தால் சொல்லுங்கள்.

நீங்கள் சொல்லவேண்டும் என நினைப்பதை கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.




Monday, September 12, 2011

கடவுள்

 என் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு விடைகாண முயற்சித்தேன். அதை பற்றி எழுதுகிறேன். தவறு இருந்தால் மன்னித்துகொள்ளுங்கள்.

கடவுள் என்ப(து)வர் ஒரு உருவமா அல்லது சக்தியா?. இது சமீபகாலமாய் என் மனதில் தோன்றிய கேள்வி.  
  இதைப் பற்றி யோசனை செய்ததில் என்னைப் பொறுத்தவரை கடவுள் என்பது 
  ஒரு தன்மை என்றே நினைக்கிறேன். கடவுளை  அடைதல் என்பது கடவுள் தன்மையை அடைவது தான்.
 அப்படியானால் எது கடவுள் தன்மை?

தெரியவில்லை! இன்னமும் யோசிக்க வேண்டும். தெரிந்தவர்கள் கூறுங்கள் விவாதிப்போம்.

நன்றியுடன்,

ராஜேஸ்வரன்.








Friday, September 9, 2011

வணக்கம் நண்பர்களே ;

இது என்னுடைய முதல் பதிவு .

 எனக்கு ஊக்கம் தந்து ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் எழுத ஆரம்பிக்கிறேன். 

நான் ரசித்த sms.
"நம்முடைய் தவறுகள் கண்டுபிடிக்கப்படும்போது  நாம் சிறந்த வக்கீலாக மாறி அதை நியாயப்படுத்த முயற்சிக்கிறோம்."

ஆனால் 

"மற்றவர்களுடைய தவறுகள் தெரிய வரும்பொழுது நாம் சிறந்த நீதிபதியாக மாறி அவர்களை குற்றவாளியக்கிவிடுகிறோம்."
---------

நன்றியுடன்,

ராஜேஸ்வரன்